விளாத்திகுளம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
விளாத்திகுளம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்;
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தொழிலாளி
விளாத்திகுளம் அருகே உள்ள நமச்சிவாயபுரம் கிராமத்ைத சேர்ந்தவர் மணியன்(வயது 56). கூலி தொழிலாளி. இவர் , நேற்று மதியம் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த தந்தையை இழந்து பாட்டியின் பாதுகாப்பில் இருந்து வரும் 7 வயது சிறுமியை, அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் கட்டிடத்திற்குள் ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார்.
பாலியல் தொல்லை
அங்கு வைத்து அவர், அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே கட்டிடத்திற்கு வெளியே வந்துள்ளார். பின்னர் நடந்தவற்றை தன் பாட்டியிடம் சிறுமி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி, இதுகுறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போக்சோ சட்டத்தில் கைது
இதன் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கலா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணியனை கைது செய்தார்.