சென்னை விமான நிலையத்தில் 65 விமானங்கள் தாமதம்
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், அந்தமான் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய 52 விமானங்கள் 10 நிமிடங்களில் இருந்து 35 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.
அதேபோல் பன்னாட்டு விமான சேவையிலும் புறப்பாடு விமானங்கள் தாமதமாகி உள்ளன. அதன்படி சென்னையில் இருந்து அபுதாபி, குவைத், சார்ஜா, கத்தார், துபாய், இலங்கை, லண்டன், டாக்கா ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் 13 விமானங்கள் 30 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. ஆனால் சென்னைக்கு வந்த உள்நாட்டு விமானங்களில் எந்தவித தாமதமும் இன்றி தரை இறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.