‘டிரம்ஸ்’ இசைத்து மகிழ்ந்த பெண் அமைச்சர்

காரைக்காலில் ‘டிரம்ஸ்’ இசைத்து பெண் அமைச்சர் மகிழ்ந்தார்

Update: 2021-11-08 07:48 GMT
புதுச்சேரி, நவ.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் ‘ஆசாத் கி அம்ருத் மகோத்சவ்’ என்ற பெயரில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் தஞ்சை தென்னக பண்பாட்டு நடுவம் மற்றும் புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை சார்பில் மெல்லிசை  மற்றும் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
காரைக்கால் அம்மையார் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார். கலை  பண்பாட்டுத்  துறை  இயக்குனர் கண்ணன், காரைக்கால் மாவட்ட துணை கலெக்டர் பாஸ்கரன், உதவி நூலக அதிகாரி சம்பந்தம் மற்றும் காரை சுப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின்போது அமைச்சர் சந்திர பிரியங்கா, டிரம்ஸ் கருவியை இசைக்கலைஞருடன் சேர்ந்து இசைத்து மகிழ்ந்தார். இதை பார்த்த அதிகாரிகள், பொதுமக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். 
இதனை தொடர்ந்து அமைச்சர் சந்திரபிரியங்கா பேசுகையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கணினி மயமாக்கப்பட்ட அருங்காட்சியகம் தொடங்கப்படும். காரைக்கால் அம்மையார் பாடல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடப்படும் என்றார்.

மேலும் செய்திகள்