பரோலில் சென்ற 15 கைதிகள் மீண்டும் ஜெயிலுக்கு திரும்பினர்
பரோலில் சென்ற 15 கைதிகள் மீண்டும் ஜெயிலுக்கு திரும்பினர்
வேலூர்
வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு பரோல் கேட்டு 30-க்கும் மேற்பட்ட நன்னடத்தை கைதிகள் ஜெயில் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
அவர்களின் மனுக்களை பரிசீலனை செய்து 15 பேருக்கு மட்டும் 3 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. கடந்த 2-ந் தேதி அவர்கள் ஜெயிலில் இருந்து தங்களது வீடுகளுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 15 பேரும் மீண்டும் ஜெயிலுக்கு திரும்பினார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.