சென்னையில் இருந்து ரெயில் மூலம் 1,300 டன் உர மூட்டைகள் நெல்லை வந்தது
சென்னையில் இருந்து ரெயில் மூலம் 1,300 டன் உர மூட்டைகள் நெல்லை வந்தது
நெல்லை:
சென்னையில் இருந்து ரெயில் மூலம் 1,300 டன் உர மூட்டைகள் நெல்லைக்கு வந்தது.
உர மூட்டைகள்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதையொட்டி பெரும்பாலான விவசாயிகள் நெல் பயிர் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு தேவையான உரங்களை வேளாண்மை துறை அதிகாரிகளும், தனியார் உர நிறுவனத்தினரும் கொள்முதல் செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இந்த நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து 1,300 டன் யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உர மூட்டைகள் சரக்கு ரெயிலில் ஏற்றி நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நெல்லைக்கு வந்தது
இந்த சரக்கு ரெயில் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அங்குள்ள இறங்கு தளத்தில் தொழிலாளர்கள் உர மூட்டைகளை இறக்கி லாரிகளில் ஏற்றினர். இந்த உர மூட்டைகள் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள உர கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதேபோல் நேற்று முன்தினம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 21 ரெயில் பெட்டிகளில் டி.ஏ.பி. மற்றும் பொட்டாஷ் உர மூட்டைகள் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டன.