தந்தை இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

தந்தை இறந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-11-07 20:29 GMT
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகன் லட்சுமி நரசிம்மன் (வயது 46). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தந்தை இறந்ததால் சோகத்தில் இருந்த லட்சுமி நரசிம்மன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்