வீடு புகுந்து நகை திருட்டு

வீடு புகுந்து நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-11-07 20:12 GMT
மதுரை, 
மதுரை கருப்பாயூரணி மல்லிகை நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவர் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி, பித்தளை குத்து விளக்கு, தங்க நாணயம், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து கார்த்திக் மாட்டுத்தாவணி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்