நாய்கள் தொல்லை
நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் வேலைக்கு வந்து விட்டு மாலை அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து ஊருக்கு செல்வது வழக்கம். தற்போது, பஸ்நிலையத்தில் நாய்கள்அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் அவை சண்டையிடுவதும், விரட்டுபவர்களை கடிக்க முயற்சிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள் அச்சத்துடனே வந்த செல்கிறார்கள். எனவே, பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.சிவக்குமார், நாகர்கோவில்.
வீணாகும் குடிநீர்
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட துவரங்காடு பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை அருகில் சாலையோரத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதனால், அந்த பகுதியில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துராஜ், திட்டுவிளை.
வடிகால் ஓடை தேவை
தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈத்தாமொழியில் இருந்து வண்டாவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் வணிகர் தெரு அருகில் சாலையில் வடிகால் ஓடை அமைக்கப்பாடாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓடைகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, அதிகாரிகள் வடிகால் ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீனிவாசன்,
ஈத்தாமொழி.
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில் கோட்டார் செந்தூரான் நகரில் 2-வது குறுக்கு தெரு உள்ளது. இந்த தெருவில் வடிகால் ஓடை அமைக்கப்படாததால் ஒரு திருப்பத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுபின், செந்தூரான் நகர்.
விபத்து அபாயம்
நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியின் பின்புறம் முதன்மை கல்வி அதிகாரி அலுவலக சாலையில் ஒரு விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படததால் பெரிய கல் ஒன்று வெளியே தெரிந்தபடி காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள கல்லை அப்புறப்படுத்தி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.