ஸ்கூட்டர் மீது பஸ் மோதல்: அரசு பள்ளி தலைமை ஆசிரியைக்கு தீவிர சிகிச்சை

ஸ்கூட்டர் மீது பஸ் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-11-07 18:57 GMT
கரூர், 
பள்ளி தலைமை ஆசிரியை
கரூர் புலியூர் அருகே உள்ள வடக்குபாளையம் குமரன் பார்க் பூர்ணிமா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி தங்கம்மாள் (வயது 45). இவர் ரங்கம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் தனது ஸ்கூட்டரில் கரூர்- திருச்சி சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்து கரூர் வழியாக கோவை செல்லும் அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டரில் மோதியது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதில் பலத்த காயம் அடைந்த தங்கம்மாளை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதையடுத்து, விபத்திற்கு காரணமான பஸ் டிரைவர் சந்திரசேகர் மீது பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்