கால்வாயில் தவறி விழுந்து பெயிண்டர் சாவு

திருப்புவனம் அருகே கால்வாயில் தவறி விழுந்து பெயிண்டர் இறந்தார்.

Update: 2021-11-07 18:37 GMT
திருப்புவனம்,

திருப்புவனம் அருகே பழையனூர் போலீஸ் சரகத்தை சேர்ந்தது பிரமனூர் கிராமம். இங்குள்ள வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் குருவையா (வயது 29). பெயிண்டர். அவர் நேற்று முன்தினம் இரவு அங்கு உள்ள தென்னந்தோப்பு அருகே பழையனூருக்கு செல்லும் கால்வாயின் மீது அமர்ந்து மது அருந்தி உள்ளார். அது சமயம் தவறி கால்வாயில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பழையனூர் போலீசார் நேற்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்