விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை
இளையான்குடி அருகே விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள திருவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவருடைய மனைவி அழகு. இவர்களது மகள் கவிதா (வயது 17). பிளஸ்-2 மாணவி. இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய கவிதா மனவருத்தத்துடன் இருந்து உள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி பேஸ்ட்(விஷம்) எடுத்து சாப்பிட்டு உள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை பெற்றோர், அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பரமக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.