வாகனம் மோதி காவலாளி சாவு

வாகனம் மோதி காவலாளி உயிரிழந்தார்.;

Update: 2021-11-07 18:04 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை வடம்போக்கி தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 57). இவர் திருச்சுழி சாலையில் உள்ள தனியார் பஞ்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இரவு ராஜகோபால் திருச்சுழி சாலையில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ராஜகோபால் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அவரது மனைவி கல்யாணி  தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்