காவேரிப்பாக்கம் ஏரியில் அமைச்சர் காந்தி ஆய்வு

தொடர்மழை காரணமாக காவேரிப்பாக்கம் ஏரியில் அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Update: 2021-11-07 17:31 GMT
காவேரிப்பாக்கம்

தொடர்மழை காரணமாக காவேரிப்பாக்கம் ஏரியில் அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அமைச்சர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிய தொடங்கி உள்ளன. 

அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அரசு அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மூன்றாவது பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி கடைவாசல் பகுதியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

முன்னெச்சரிக்கை   நடவடிக்கை

அப்போது ஏரிக்கரையின் உறுதி தன்மை, மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களையும், ஏரிக்கு கால்வாய் மூலம் நீர் வரத்து மற்றும் ஏரியில் இருந்து கடைவாசல் வழியாக வெளியேற்றப்படும் உபரி நீர் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தனர். மேலுன் ஏரியின் மூலமதகு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து கடப்பேரி பகுதியில் உள்ள வரத்து கால்வாயை ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் உள்பட தி.மு.க. நிர்வாகள், அரசு அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்