கஞ்சா விற்ற பெண் கைது

கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-07 17:26 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் இந்திரா (வயது 60) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்