கிணத்துக்கடவு பகுதியில் நீர்தேக்க தொட்டிகளில் குடிநீர் தரத்தை அதிகாரிகள் ஆய்வு

கிணத்துக்கடவு பகுதியில் நீர்தேக்க தொட்டிகளில் குடிநீர் தரத்தை அதிகாரிகள் ஆய்வு

Update: 2021-11-07 17:01 GMT
கிணத்துக்கடவு

மழை காலங்களில் தண்ணீரில் கிருமிகள் உண்டாகி அதன் மூலம் பல்வேறு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 இதன்படி கிணத்துக்கடவு பகுதியில் உள்ள 34 ஊராட்சிகளிலும் தண்ணீரின் தரத்தை சுகாதார மேற்பார்வையாளர் ராஜவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் குணசேகரன், முந்துக்கிருஷ்ணன், செல்வம், சரவணகுமார் ஆகியோர் தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று அங்கு உள்ள தரை மட்டம் மற்றும் உயர் மேல்நிலை தொட்டிகளில் குடிநீர் தன்மை, தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
 
அப்போது, ஒரு சில இடங்களில் தண்ணீரில் தொட்டியில் குளோரினேசன் அளவு குறைவாக இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து குடிநீர்தொட்டிகளுக்கு குளோரினேசன் கரைசல் ஊற்றப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

குடிநீரில் 0.2 பி.பி.எம். குளோரினேசன் அளவு இருக்க வேண்டும். இந்த அளவு குறையும் பட்சத்தில் பொதுமக்களுக்கு வயிற்றுபோக்கு, காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. 

இதனை சரிசெய்ய குடிநீரில் உரிய அளவு குளோரினேசன் கலக்கப்பட்டது. தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெறும். தொற்று நோய் பரவாமல் இருக்க பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்