நலிவுற்ற, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி
இளைஞர்களுக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி
ராணிப்பேட்டை
தமிழக அரசு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்கும் விதத்தில் 25 சதவீதம் மற்றும் 35 சதவீதம் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது. கடனுதவி ெபற வயது வரம்பு இல்லை. படிக்காத இளைஞர்கள் சேவை தொழிலுக்கு ரூ.5 லட்சம் மற்றும் உற்பத்தி தொழில் கடன் ரூ.10 லட்சம் வரை பெறலாம்.
நடப்பு நிதியாண்டுக்கான ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருவதால், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் www.kviconline.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு ராணிப்பேட்டை தேவராஜ் நகரில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைப்பேசி எண்:04172-270111 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.