பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேடசந்தூர் ஆத்துமேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-11-07 16:56 GMT
வேடசந்தூர்: 

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேடசந்தூர் ஆத்துமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் ஜோதிமுத்து தலைமை தாங்கி பேசினார். வேடசந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கணேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் சவேரியார், நகர செயலாளர் கவுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பின்தங்கி வாழும் வன்னியர் இன மக்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை ரத்து செய்த கோர்ட்டு தீர்ப்பை தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் கோபால், மாவட்ட செயலாளர் வைரமுத்து மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்