ஜேடர்பாளையம் அருகே மூதாட்டியிடம் ஒரு பவுன் நகைப்பறிப்பு போலீசார் விசாரணை
ஜேடர்பாளையம் அருகே மூதாட்டியிடம் ஒரு பவுன் நகைப்பறிப்பு போலீசார் விசாரணை
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி பாப்பாத்தி (வயது 60). நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி ஜேடர்பாளையத்தில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். அப்போது பாப்பாத்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து அங்கு வந்த 3 மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பாப்பாத்தி அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரத்தை பறித்து கொண்டு மேலும் நகைகள் இருக்கிறதா என கேட்டு மிரட்டினர்.
ஆனால் நகையோ, பணமோ எதுவும் கிடைக்காததால் ஒரு பவுன் மோதிரத்தை மட்டும் பாப்பாத்தியிடம் இருந்து பறித்து கொண்டு 3 மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து பாப்பாத்தி ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் ஒரு பவுன் மோதிரத்தை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.