மோகனூரில் அதிகபட்சமாக 87 மி.மீட்டர் மழைபதிவு

மோகனூரில் அதிகபட்சமாக 87 மி.மீட்டர் மழைபதிவு

Update: 2021-11-07 16:35 GMT
நாமக்கல், நவ.8-
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு ஒரு சில இடங்களில் கனமழையும், இதர இடங்களில் லேசான மழையும் பெய்தது. குறிப்பாக மோகனூர், ராசிபுரம், கொல்லிமலையில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக மோகனூரில் 87 மி.மீட்டர் மழைபதிவானது.
நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- மோகனூர்- 87, ராசிபுரம்-72, எருமப்பட்டி-50, சேந்தமங்கலம்-45, கொல்லிமலை -43, குமாரபாளையம்-30, பரமத்திவேலூர்-20, நாமக்கல்-10, புதுச்சத்திரம்- 9, கலெக்டர் அலுவலகம் -9, திருச்செங்கோடு-5, மங்களபுரம்-3. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 383 மி.மீட்டர் ஆகும்.

மேலும் செய்திகள்