தொழிலாளர்களால் கடைவீதிகள்
திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களால் கடைவீதிகள் களை கட்டின.
திருப்பூர்,
திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களால் கடைவீதிகள் களை கட்டின.
கடைவீதிகள் களை கட்டின
தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு வெளிமாவட்ட தொழிலாளர்கள் சென்றனர். வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கியுள்ளனர். தீபாவளி பண்டிகைக்காக பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் செயல்பட உள்ளது. தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று கடைவீதிகளுக்கு வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.
நேற்று திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகமாக இருந்தது. இளைஞர்களும், இளம்பெண்களும் வந்து பேன்சி கடைகளில் பொருட்களை வாங்கி சென்றார்கள். ரோட்டோர கடைகளிலும் விற்பனை சூடுபிடித்தது. அதுபோல் திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள துணிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பூங்காவில் கூட்டம்
சில பனியன் நிறுவனங்களில் இருந்து வடமாநில தொழிலாளர்களை வாகனத்தில் அழைத்து வந்து, கடைவீதிகளுக்கு சென்று விட்டு பின்னர் மீண்டும் அவர்களை வாகனத்தில் அழைத்துச்சென்றனர். அதுபோல் ரெயில் நிலையத்திலும் வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகமாக இருந்தது. திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள வெள்ளிவிழா பூங்காவிலும் வடமாநில தொழிலாளர்கள் ஜோடி, ஜோடியாக வந்து பொழுதை கழித்தனர்.