மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதால் மோதல்; 3 பேருக்கு வெட்டு
மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தார். 3 பேரும் மணிகண்டன், சுயம்பிரகாஷ், அன்னக்கிளி ஆகியோரை தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
திருவள்ளூரை அடுத்த புட்லூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து புட்லூர் பகுதியை சேர்ந்த விக்கி, கோபி, வில்லியம்ஸ் ஆகியோர் அவரது மோட்டார் சைக்கிளை பறித்து வைத்துக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளை மீண்டும் பெறுவதற்காக நண்பர்களான சுயம்பிரகாஷ், அன்னக்கிளி ஆகியோருடன் சென்றார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மேற்கண்ட 3 பேரும் மணிகண்டன், சுயம்பிரகாஷ், அன்னக்கிளி ஆகியோரை தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர். காயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மணிகண்டன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய விக்கி, கோபி, வில்லியம்ஸ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.