பசுமை போர்த்திய வயல்வெளி

ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட வயல்வெளிகள் பசுமை போா்த்தி காணப்படுகிறது.

Update: 2021-11-06 23:46 GMT
மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப நகர்புறங்கள் விரிவடைந்து வருகிறது. நகர்புறத்தை ஒட்டியுள்ள வயல்வெளிகளும் கான்கிரீட் சுவர்களாக எழுப்பப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாறி வருவதை காணமுடிகிறது. இத்தகைய சூழ்நிலையிலும் ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட வயல்வெளிகளை இன்று வரை காப்பாற்றி வருவது காலிங்கராயன் வாய்க்கால். இந்த பாசன பகுதிகளில் நெற் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து வயல்வெளி முழுவதும் பசுமை போர்த்தி காணப்படுகிறது.

மேலும் செய்திகள்