நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணிடம் மணிப்பர்ஸ் திருடிய 2 பேர் கைது
பெண்ணிடம் மணிப்பர்ஸ் திருடிய 2 பேர் கைது
நெல்லை:
மானூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் செண்பகம். இவருடைய மனைவி வேலம்மாள் (வயது 65). இவர் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினருக்கு துணையாக இருந்து வந்தார். சம்பவத்தன்று மகப்பேறு வார்டு அருகே படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் வேலம்மாள் வைத்து இருந்த மணிப்பர்சை திருடியுள்ளனர். இதனை பார்த்த அந்த பகுதியினர் 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் நெல்லை புதுமனை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிவா (33), சமாதானபுரம் முனிசிபல் காலனியை சேர்ந்த மதன் (46) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து ரூ.230 இருந்த மணிப்பர்சையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.