பெண்களிடம் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

பெண்களிடம் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது;

Update: 2021-11-06 22:22 GMT
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் விமலா வசந்தகுமாரி. ஓய்வு பெற்ற ஆசிரியை. மன்னார்புரத்தை சேர்ந்தவர் மரிய பெப்பின் ஆசிரியை. இவர்கள் இருவரும் சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைன்கிளில் வந்த வாலிபர்கள் அவர்கள் அணிந்திருந்த தங்க சங்கிலிகளை பறித்து சென்றனர். இதுகுறித்து உவரி, திசையன்விளை போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சண்முகவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலை சேர்ந்த அருண்குமார் (வயது 23) என்பவரை உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி நேற்று கைது செய்தார்.

மேலும் செய்திகள்