கணவர் மீது திராவகம் ஊற்றிய மனைவி கைது

கணவர் மீது திராவகம் ஊற்றிய மனைவி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-06 22:19 GMT
மலைக்கோட்டை:
திருச்சி கீழதேவதானத்தை சேர்ந்தவர் எழிலரசன்(வயது 45). இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் இருவரும் காயத்ரியுடன் வசித்து வருகிறார்கள்
இந்நிலையில் கடந்த 4-ந்தேதி இரவு வீட்டில் எழிலரசன் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த காயத்ரி, எழிலரசனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி, அவரது கையில் வைத்திருந்த திராவகத்தை எழிலரசனின் தொடையிலும், பிறப்புறுப்பிலும் ஊற்றி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து எழிலரசன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காயத்ரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்