பஞ்சாயத்து தலைவி உள்பட 2 பேர் கைது

பஞ்சாயத்து தலைவி உள்பட 2 பேர் கைது

Update: 2021-11-06 22:19 GMT
மானூர்:
மானூர் அருகே பள்ளமடையைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 64). இவருடைய மகன் சதீஷ் தேவேந்திரன். இவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்த சுப்பிரமணியன் (51), தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா இனாம் வெள்ளக்கால் பஞ்சாயத்து தலைவியான செல்வசுந்தரி (52) ஆகிய 2 பேரும் மாடசாமி, சதீஷ் தேவேந்திரன் ஆகியோரிடம் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு அரசு வேலை வாங்கி தரவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாடசாமி, மானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து மாடசாமிக்கு சுப்பிரமணியன், செல்வசுந்தரி ஆகியோர் கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியன், செல்வசுந்தரி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்