விஷம் குடித்து அரசு பஸ் டிரைவர் தற்கொலை

பாகல்கோட்டையில் சம்பளம் பட்டுவாடா செய்வதில் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் விஷம் குடித்து அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்த பரிதாபம் நடந்துள்ளது.

Update: 2021-11-06 21:20 GMT
பாகல்கோட்டை: பாகல்கோட்டையில் சம்பளம் பட்டுவாடா செய்வதில் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் விஷம் குடித்து அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்த பரிதாபம் நடந்துள்ளது. 

அரசு பஸ் டிரைவர்

பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா கெரூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமப்பா கோண்டி (வயது 44). இவர் வடமேற்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தில், பாதாமி பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். 
இந்த நிலையில் கடந்த 4 மாதமாக பரமப்பாவுக்கு, அதிகாரிகள் சம்பளம் பட்டுவாடா செய்யவில்லை என்று தெரிகிறது. 

இதனால் அவர் பலரிடம் இருந்து கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தார். மேலும் அவர் தனக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டு வந்து உள்ளார். ஆனாலும் சம்பள பணத்தை பட்டுவாடா செய்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது.

விஷம் குடித்து தற்கொலை

இதனால் மனம் உடைந்த பரமப்பா கடந்த 2-ந் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாதாமி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.  ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரமப்பா இறந்தார். 

சம்பளம் பட்டுவாடா செய்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் விஷம் குடித்து பரமப்பா தற்கொலை செய்தது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து கெரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்