கடையநல்லூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவவீரர் மர்ம சாவு

கடையநல்லூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்தார்.

Update: 2021-11-06 20:32 GMT
கடையநல்லுர்:
கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் நடு தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 56). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மாரிமுத்து அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாரிமுத்துவிடம் கோபித்து கொண்ட மனைவி குழந்தைகளுடன் தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாரிமுத்து மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று, இறந்த மாரிமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாரிமுத்து உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்