லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது

சிவகாசி அருகே லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-06 20:25 GMT
சிவகாசி, 
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிவகாசி-விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் பின்புறம் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு முதியவர் நின்று கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை செய்த போது அவர் திருத்தங்கல்-சுக்கிரவார்பட்டி ரோட்டில் உள்ள பராசக்திநகரை சேர்ந்த வேல்சாமி (வயது67) என்றும், துண்டு சீட்டுகளில் வெளி மாநில லாட்டரி என்று சில எண்களை எழுதி கொடுத்து பணம் வசூலித்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த துண்டு சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.24,990-யை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்