சாத்தூரில் 1 மணி ேநரம் பலத்த மழை
சாத்தூரில் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சாத்தூர்,
சாத்தூரில் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பலத்த மழை
வடகிழக்கு பருவமழையையொட்டி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இருக்கன்குடி, ஓ.மேட்டுப்பட்டி, மேட்டமலை, படந்தால், ஊஞ்சம்பட்டி ஆகிய கிராமங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்தநிைலயில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் மாலை 5 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் ஆக ஆக பலத்த மழையாக பெய்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
சுமார் 1 மணி நேரம் காற்றுடன் கூடிய பெய்த பலத்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் கடந்த ஒரு வார காலமாக சாத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. கம்பு, நெல், சோளம், வெள்ளரிக்காய், மிளகாய், கடலை, மல்லி போன்றவைகள் விதைக்கப்பட்டு வருகிறது. இந்த மழை விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் விவசாயிகள்.
பலத்த மழையினால் தாழ்வான பகுதிகளிலும், சேதமடைந்த சாலைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.