வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் ேகாவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சுவாமிக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.