அம்மையநாயக்கனூரில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

அம்மையநாயக்கனூரில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-11-06 19:25 GMT
கொடைரோடு:
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி ராஜதானிகோட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் வந்து அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.  
இதையடுத்து சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்