திருச்செங்கோடு அருகே மொபட் மீது கார் மோதல்; விவசாயி சாவு

திருச்செங்கோடு அருகே மொபட் மீது கார் மோதல்; விவசாயி சாவு

Update: 2021-11-06 18:33 GMT
எலச்சிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள கோலாரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 65). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்செங்கோடு அருகே உஞ்சனையில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் சென்றபோது, அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அந்த சமயம் பின்னால் வந்த கார் ஒன்று மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. 
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பாலசுப்பிரமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலசுப்பிரமணி இறந்தார். இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரில் வந்தவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்