திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.;

Update: 2021-11-06 17:56 GMT
திருவண்ணாமலை

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து பொதுமக்கள் தற்போது ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பி, ெவளியில் நடமாடி வருகின்றனர். 

தற்போது தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வந்ததால் நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய வந்தனர். 

இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சியளித்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்