ஆரணியில் குடியிருப்புகளை சூழ்ந்த ஏரிநீர்
ஆரணி கே.கே.நகர் விரிவாக்க பகுதியில் குடியிருப்புகளை ஏரிநீர் சூழ்ந்தது.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியில் கே.கே.நகர் விரிவாக்க குடியிருப்பு பகுதி உள்ளது.
இந்தக் குடியிருப்புப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி அருகில் பையூர் ஏரி உள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் பையூர் ஏரி நிரம்பி வழிகிறது.
பையூர் ஏரி கால்வாயை மர்மநபர்கள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் உடைத்துள்ளனர்.
இதனால் ஏரியில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேறி கே.கே. நகர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்துள்ளது.
இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வர முடியாத நிலை இருந்து வருகிறது.
வீடுகளை சூழ்ந்த ஏரிநீர் அப்படிேய நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
ஆரணி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ள ஏரிநீரை வடிய வைக்க வேண்டும், எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.