சிறுணமல்லி ஏரி நிரம்பி வழிந்தோடும் உபரிநீரால் தார் சாலை சேதம்
சிறுணமல்லி ஏரி நிரம்பி வழிந்தோடும் உபரிநீரால் தார் சாலை சேதம்;
நெமிலி
நெமிலி பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பின.
அதேபோல் நெமிலியை அடுத்த சிறுணமல்லி ஏரியும் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது.
வழிந்தோடும் உபரிநீர் சிறுணமல்லி - கீழ்களத்தூர் தார் சாலையை கடந்து செல்கிறது. இதனால் சாலையில் சேதம் ஏற்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழிந்தோடும் நீரை கடந்து செல்ல அச்சப்படுகிறார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி ஒன்றிய தலைவர் வடிவேல் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உதவியோடு தீர்வு காண்பதாக கூறினார்.