சாராயம் விற்ற வாலிபர் கைது

சாராயம் விற்ற வாலிபர் கைது;

Update: 2021-11-06 16:57 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது

 அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

பச்சூர் அருகே காட்டாற்றில் வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர் பச்சூர் பகுதியை சேர்ந்த பலராமன் (வயது 49) என்பதும், 14 லிட்டர்  சாராயத்தை மறைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் செய்திகள்