அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் முளைக்க தொடங்கியது கொட்டகை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

அன்னவாசலில் தொடர்ந்து பெய்த மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளில் உள்ள நெல்மணிகள் முளைக்க தொடங்கின.

Update: 2021-11-06 16:41 GMT
அன்னவாசல்:
நெல் மணிகள் முளைக்க தொடங்கியது
அன்னவாசல் வட்டத்திற்கு உட்பட்ட 650 எக்டேர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் மணிகளை பெரும்பாலான விவசாயிகள் அன்னவாசலில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அன்னவாசலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. 
இதனால் அன்னவாசல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையின் காரணமாக மழை நீர் புகுந்து நெல் மணிகள் பல மூட்டைகள் முளைக்க தொடங்கியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 
கோரிக்கை 
மேலும் வரும் நாட்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டகை அமைத்து நெல் மூட்டைகளை மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். அன்னவாசல் பகுதிகளில் விளையும் விவசாயிகளின் நெல் மூட்டைகளை தொய்வின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என அன்னவாசல் பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்