பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

Update: 2021-11-06 14:05 GMT
பந்தலூர்

பந்தலூர் அருகே உள்ள எருமாடு பகுதியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  மேலும் கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு ஒழிப்பு முகாமும் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் ஷீஜா தலைமை தாங்கினார். டாக்டர் கார்த்திகேயன், சித்தா டாக்டர் கிரீஸ்மா, சுகாதாரஆய்வாளர் கணையேந்திரன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். 

மேலும் டெங்கு பரவும் முறை, அதை தடுக்கும் முறை குறித்து விளக்கினர். பின்னர் பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தை சுற்றிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்