விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
ஆற்காடு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ஆற்காடு
ஆற்காடு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தக்கான் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 48), கூலி தொழிலாளி.
இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இவர் கடந்த 1-ந் தேதி காலை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சச்சிதானந்தம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.