அவினாசி
அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங் கேசுவரர் கோவில் உள்ளது. கந்த சஷ்டியை முன்னிட்டு கோவிலில் வள்ளிதெய்வானை சுப்பிரமணியசாமிக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திருப்பூர், ஊட்டி, சேவூர், கருவலூர், பழங்கரை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.