நிரம்பி வழியும் குப்பை தொட்டி (படம் உண்டு)
பெருமாநல்லூரை அடுத்து தட்டான் குட்டையில் இருந்து அத்திக்காடு செல்லும் வழியில் உள்ள குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டியில் குப்பைகள் நிறைந்து விட்டன. இதனால் குப்பகைள் தொட்டிக்கு அருகில் கொட்டப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, ஈ மற்றும் கொசு தொல்லை அதிகரித்து விட்டது. எனவே பொதுமக்களின் நலன் கருதி குப்பை தொட்டியில் கொட்டப்பட்டுள்ள குப்கைளை அப்புறப்படுத்த வேண்டும்.
ஆர். அன்பு செல்வன்,
தட்டான் குட்டை
சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் (படம் உண்டு)
திருப்பூர் மாநகர் ஆத்துப்பாளையம் பகுதியில் இருந்து வெங்கமேடு செல்லும் சாலையில் பனியன் கழிவுகள் மற்றும் கோழி கழிவுகள் மூட்டை மூட்டையாய் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ளது. இந்த கழிவுகள் சாலைவழியே சிதறிகிடங்கின்றது. இதனால் பொதுமக்கள் நடமாட முடியாமல் பெரிதும் தவித்து வருகின்றார்கள். இந்த சாலை வழியாக ஆத்துப்பாளையம் மற்றும் பிறபகுதிகளில் இருந்து அய்யங்காளிபாளையம் வி.கே. அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் சென்று வருகிறார்கள். இதுபோன்ற ரோட்டில் குவிந்து கிடக்கும் கழிவுகளை மாநகராட்சி மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ந.தெய்வராஜ்.
வெங்கமேடு சாலை,
ஆத்துப்பாளையம்.
தண்ணீர் தேங்கி நிற்கும் பாலம்
ஊத்துக்குளி பேரூராட்சி வார்டு எண்-8-ல் சென்னிமலை ரோடு சந்திக்கும் ரயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் அதிகளவில் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் நடந்து செல்லவும் வாகனங்கள் கடந்து செல்லவும் இயலாத நிலை இருந்து வருகிறது. மேலும் இந்த ரெயில்வே நுழைவு பாலம் அருகில் மழைநீர் தேங்கி நின்று செல்வதால் ரெயில் பாதை அதன் பலத்தை இழந்து விபத்து ஏற்பட்டு விடும் அபாயம் உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே. சுந்தர்
ஊத்துக்குளி