உத்திரமேரூர் அருகே சேற்றில் சிக்கி 7-ம் வகுப்பு மாணவி சாவு

உத்திரமேரூர் அருகே சேற்றில் சிக்கி 7-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-11-06 05:36 GMT
உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த தினையாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். கூலித்தொழிலாளி. இவரது மகள் யாழினி (வயது 13). களியாம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை அவர் வீட்டின் அருகே உள்ள காலி நிலத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை காணாததால் தேடி பார்த்தபோது அங்கு தேங்கியிருந்த முழங்கால் அளவு தண்ணீர் மற்றும் சேற்றில் முகம் புதைந்தபடி யாழினி மயங்கி கிடந்தார். 

உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு யாழினியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

யாழினிக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இதனால், வலிப்பு வந்து சேற்றில் சிக்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பெருநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்