ரெயில்வே தண்டவாள மின்கம்பத்தில் தூக்குப்போட்டு காவலாளி தற்கொலை

ரெயில்வே தண்டவாள மின்கம்பத்தில் தூக்குப்போட்டு காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-11-06 05:05 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பொதட்டூர்பேட்டை தங்கசாலை தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 53). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர் சென்னையில் உள்ளதால் 10 நாட்களுக்கு ஒரு முறை தன்னுடைய வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

மது குடிக்கும் பழக்கம் கொண்ட அவர் மாத சம்பளத்தை தன்னுடைய வீட்டில் கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவரது மனைவி மாத சம்பளம் கொடுக்கவில்லை என்று கணவரிடம் கேட்டுள்ளார். தீபாவளி பண்டிகை செலவுக்கும் பணம் தரவில்லை என்று தனது கணவரிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து சீனிவாசன் தனது மனைவியுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூர்- ஏகாட்டூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள மின்கம்பத்தில் சீனிவாசன் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் குடும்பத்தகராறு காரணமாக ரெயில்வே தண்டவாள மின்கம்பத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்