திருவள்ளூர் அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

திருவள்ளூர் அருகே பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-11-06 04:59 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் திருப்புகழ் தெருவை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி நவநீதம் (வயது 40). இவர் நேற்று முன்தினம் கடம்பத்தூர் சென்றுவிட்டு மீண்டும் திருவள்ளூர் நோக்கி தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அவர் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென நவநீதம் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சரடை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து அவர் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம நபர்கள் யார் என தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்