மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; 3 வயது குழந்தை பலி
எருமையூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 3 வயது குழந்தை பலியானார்.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நடுவீரப்பட்டு நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதன் (வயது 36). இவருடைய மனைவி ரம்யா (30), இவர்களுடைய மகள் ரித்திக் ஷா (3). இவர்கள் 3 பேரும் தீபாவளியன்று எருமையூர் பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். எருமையூர் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரித்திக் ஷா கீழே விழுந்து படுகாயம் அடைந்தாள்.
உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை ரித்திக் ஷா பரிதாபமாக இறந்து விட்டது. இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.