ஆட்டையாம்பட்டி, தலைவாசலில் அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு
ஆட்டையாம்பட்டி, தலைவாசலில் அரசு பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டன.
சேலம்
இளம்பிள்ளையில் இருந்து ராசிபுரம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் ஆட்டையாம்பட்டி அருகே கண்டர்குலமாணிக்கம் பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது அங்கு வந்த சிலர் வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, பஸ் கண்ணாடியை உடைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரியாம்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி, கந்தசாமி, சண்முகம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதேபோல் தலைவாசலில் இருந்து ஊனத்தூர் சென்ற அரசு டவுன் பஸ்சின் கண்ணாடியை வேப்பநத்தம் கிராமத்தில் சிலர் உடைத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.