பெட்ரோல், டீசல் விலை குறைந்தது வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

Update: 2021-11-05 21:54 GMT
நெல்லை:
பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே சென்றது. இந்த நிலையில் தமிழக அரசு அதன் விலையை சற்று குறைத்தது. ஆனாலும் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. இதனால் வாகனங்களின் வாடகை உயர்ந்து, அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்தது. இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை குறைத்தது. அதன்படி பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் ரூ.10-ம் குறைந்தது.
நெல்லையில் இந்த விலை குறைவு நேற்று முன்தினம் தீபாவளி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி நெல்லையில் ரூ.106.96-க்கு விற்பனை ஆன பெட்ரோல் நேற்று ரூ.101.69-க்கு குறைத்து விற்பனை செய்யப்பட்டது. இதே போல் டீசல் விலை ரூ.102.91-ல் இருந்து ரூ.91.76 ஆக குறைத்து விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை குறைப்பால் வாகன ஓட்டிகள் மற்றும் பெட்ரோல், டீசல் உபயோகிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்