இருதரப்பினரிடையே மோதல்; 13 பேர் கைது

இருதரப்பினரிடையே மோதல் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-05 20:56 GMT
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெரணி கிராமத்தில் 3 பெண்கள் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த ராகுல் (வயது 26), பூவரசன் (25), கார்த்தி (19), பெரியசாமி (21) ஆகியோர் அந்த பெண்களை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த பெண்கள் தெருவில் உள்ள சில இளைஞர்களிடம் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு, ராகுல் உள்பட 13 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்