விதிகளை மீறி பட்டாசு வெடித்த 47 பேர் மீது வழக்கு

விதிகளை மீறி பட்டாசு வெடித்த 47 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Update: 2021-11-05 20:44 GMT
திருச்சி
காற்று மாசு மற்றும் ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அத்துடன் சிலரக வெடிகளை வெடிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தீபாவளியன்று அரசின் விதிகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இரவு வரை பட்டாசு வெடித்ததாக திருச்சி மாநகரில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், 25 பேர் மீதும், திருச்சிமாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பா.மூர்த்தி உத்தரவின்பேரில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 22 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாநகரில் தீபாவளி அன்று இரவு தொடர்ச்சியாக ஆங்காங்கே கூடி நின்று பொதுமக்கள் பட்டாசு வெடித்ததன் காரணமாக நகரின் பல்வேறு சாலைகள் புகை மண்டலமாக காட்சி அளித்தது. பட்டாசு வெடித்ததால் காற்றில் மாசு பெரிய அளவில் அதன் டெசிபிள் அளவு மாற்றத்தை ஏற்படுத்த வில்லை என்றும், அவை திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாக மாவட்ட மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்